"தினேஷ் ! வாந்தி எடுத்துட்டேன்... யார் கிட்டே சொல்லனும் ?"
யாராவது பின்னாடி நின்று கேள்விகேட்டால், என் ஸ்விவெல் சேரில் திரும்பி பதில் சொல்லும் அவகாசத்தில் கேள்விக்கு பதில் யோசிப்பது என் வழக்கம். இந்தக்கேள்விக்கு, ஆச்சரியரேகைகள் படர்ந்த முகத்துடன் யோசனையே இல்லாமல் திரும்பினேன்..
"வாட் ?" என்று புருவத்தை மடித்து அஷ்டகோனலாக வாயைப்பிளந்து இரண்டு கைகளை விரித்துக் கேட்டேன்.
"அங்கே பாருங்க.." என்று காமித்தாள். ப்ளூ கார்பெட்டில் திட்டுத்திட்டாக இருந்தது.
"யார் கிட்டே சொல்லனும் ??" என்று கேட்டாள் மறுபடியும்..
"உங்க ஹஸ்பெண்ட் கிட்டே.." என்று கண்ணடித்துக்கொண்டே சொன்னேன்.
"விளையாடாதீங்க, தினேஷ்.. ஹவுஸ்கீப்பிங் ஃபோன் பண்ணி கொஞ்சம் வந்து க்ளீன் பண்ணிட்டுப்போகச் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்.."
ஹ்ம்ம்ம்.... நான் என்ன டீம் லீடரா.. இல்ல...சே..! இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட விவஸ்தயே இல்லை.
6667....
"அட்மின் ? கொஞ்சம் ஹவுஸ்கீப்பிங் இங்கே வர சொல்லரீங்களா.. ஃபிஃப்த் ஃப்ளோர்.."
"வர்ராங்களா ?"
"ம்ம்ம்.. திடீர்ன்னு என்னாச்சு உங்களுக்கு... "
அடெடே.. ப்ரெக்னன்ட் என்று சொல்லுவாளோ.. நாலு மாசம் அப்ஸ்காண்ட் ஆகிவிடுவாளே !! சலீமை ரீப்ளேஸ்மெண்ட்டாக போட வேண்டியதுதான். அப்போ சலீம் வேலை பார்க்கும் மாட்யூலை ப்ரதாப்பிடம் கொடுத்தாக வேண்டும்... புதுசாக ஒரு ஃப்ரெஷரை எடுத்து க்ரூம் பண்ண வேண்டும்.. பாஸிடம் சொல்லி...
"இல்ல.. கார்த்தால கத்திரிக்கா சாப்டேன். சரியா ஒத்துக்கலை. தட்ஸ் ஆல்.."
அப்பாடா !! இருந்தாலும் ஒரு ஃப்ரெஷரை ரெக்ரூட் செய்ய வேண்டும்.
"டேக் கேர்..! " என்று சொல்லிவிட்டு திரும்பி என் வேலையைப் பார்க்க உட்கார்ந்தேன். பத்து நிமிடங்கள் கடந்தபின், ஹவுஸ்கீப்பிங் சுதாகர் வந்தார். "சார். கூப்டீங்களா ?"
நிமிர்ந்து பார்த்தேன். சுதாகருக்கு என் வயதில் ஒரு மகன் இருந்தான். அந்தளவு வயதானவர்.
"யா !!" என்று திரும்பி வாந்தி ஸ்பாட்டை காமித்தேன். "அங்கே... !!"
அங்கே அவள், அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.
சுதாகர் குழப்பத்துடன் பார்த்தார். இதையெல்லாம் நான் செய்ய வேண்டுமா.. என்று யோசித்துக்கொண்டிருந்தார் போலும்.
நிலைமையின் இறுக்கம் இப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது.. ஓஹோ! மாட்டிக்கொண்டு விட்டேனா ? "டாய்லெட் க்ளீன் பண்ணறவன் ட்யூட்டி முடிச்சு கிளம்பிட்டானே... வேற யாராவது இருக்காங்களான்னு பார்க்கறேன்" என்று சுதாகர் கீழே போய்விட்டார்.
வருவாரா ? இல்லை டேக்கா கொடுத்துவிடுவாரோ.. இல்லை அட்மின் டிபார்ட்மெண்டிடம் கம்ப்ளெய்ண்ட் கொடுத்துவிடுவாரோ.. நாட் விதின் தேர் ஸ்கோப்..
என்னுடைய க்யூபிகளுக்குள் வந்தேன்.. "என்னாச்சு தினேஷ் ! என்ன சொல்லிட்டு போறார் ??" என்றாள் அவள், கூலாக. இருந்த கடுப்பில் பதில் சொல்லாமல் உட்கார்ந்து இடைப்பட்ட நேரத்தில் குவிந்துவிட்ட ஈமெயில்களை மேய ஆரம்பித்தேன்.
பத்து நிமிடங்கள் கழித்து சலீம் வந்தான். "என்னாச்சு தினேஷ் ! யாரும் க்ளீன் பண்ணலயா ??" என்று கேட்டான். அப்பொழுதுதான் எனக்கு ப்ரக்ஞை திரும்பியது. கஷ்டகாலம்.. என்ன செய்யலாம். அவளையே க்ளீன் செய்ய சொல்லலாமா ? என்ன தவறு... அவரவர் ******************** ***** ****. ஹ்ம்ம்ம்.. எனக்குச் சொல்லத் தயக்கமாக இருந்தது.
பேசாமல் நானே க்ளீன் செய்யலாமே ? அடச்சே ! சினிமாவில் குடித்துவிட்டு வரும் கணவனின் வாயில் கையேந்தி நிற்கும் மனைவி ஞாபகம் வந்தது. எனக்கென்ன தலைவிதியா ?
திரும்பவும் 6667 கூப்பிட்டேன். "அட்மின் !! இங்கே என்னோட டீம் மெம்பர் வாமிட் பண்ணிட்டாங்க.. க்ளீன் செய்யனும்... இங்கே ஹவுஸ் கீப்பிங் வந்தார்.. ஆனா அவர் ட்யூட்டி இல்லேன்னு போயிட்டார்... ஐ நீட் சம் ரெஸ்பான்ஸ்..."
பத்து நிமிடம் கழித்து சுதாகர் கையில் மாப், மற்றும் இதர சாமன்களுடன் வந்தார். அவர் முகத்தில் வெறுப்பு இருந்தது. நிச்சயமாக அவர் செய்யவேண்டிய வேலை இல்லை. அட்மின் டிபார்ட்மென்டில் நிச்சயப்படுத்தி அனுப்பியிருப்பார்கள்.
எனக்கு அவரைப்பார்க்க தைரியம் இல்லை. அவர் மனதில் "சுண்டக்கா பசங்க.. பணம் சம்பாதிக்கற திமிரு... " என்று கட்டாயம் என்னை சபித்துக் கொண்டிருப்பார். எனக்கு என்னமோ போல் இருந்தது...
யோசித்துப்பார்த்தேன் ! நான் ஏன் இங்கே மாட்டிக் கொண்டேன்... எனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? ஒரு தவறும் செய்யாமல் நான் ஏன் குற்ற உணர்ச்சியுடன் உட்கார்ந்திருக்க வேண்டும் ? ஏன் என்று தெரியவில்லை.... பட் ஐ ஃபெல்ட் கில்டி.
அன்றிலிருந்து நான் கத்திரிக்காய் சாப்பிடுவது இல்லை.
About Me
Saturday, September 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Hey.. Have a story to share, without worrying about revealing urself ?.. Tell it to the virtual world... let the world know your story but not your identity. :) http://www.project71.com/readme Enjoyy!
http://bloggingintamil.blogspot.com/2007/11/blog-post_16.html
ithunaala thaan naan eppovume
kathirikai saapiduvathuillai!
:D
nice story!
Arumai...!
Arumai...!
very nice story!
Post a Comment