Tuesday, July 10, 2007

இயல்பு

"ஏம்மா அப்பா சீக்கிரம் வந்துட்டாங்க ! ஆஃபீஸ் இன்னிக்கு ஹாஃப்டேயா ?"

சமையலரையில் காஃஃபி போட்டுக்கொண்டிருந்த அம்மாவின் புடவைத்தலைப்பை இழுத்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான். "ம்ம்ம்.. கீழே போய் D7 மாமிகிட்ட நாள நாளன்னி பாலை அவங்களையே எடுத்துக்க சொன்னேன்னு சொல்லு". அவசரம் அவசரமாக காபி கலந்து கொண்டிருந்தாள்.

"ஏம்மா ! ஊருக்கு போறோமா ?"...
"சொன்ன வேலையை செய்.. போ!". அதட்டினாள் அம்மா.

----

"ஏம்ப்பா சோகமா இருக்கே ! ஏம்ப்பா ஆஃபீஸ் இன்னிக்கு ஹாஃப்டேயா ?"
".............."
"ஏம்ப்பா காபி சாப்டாம வெச்சிருக்கே ?"
"............."


"ஏம்பபா அழறே ?" மெதுவாக கண்ணீர் வழிந்துவந்த கண்கள், குளமாகி நின்றன.
"தாத்தா செத்துப்போய்ட்டாடா !" என்று கதறி வெடித்தார் அப்பா.

என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்த்தாள் அம்மா. "வெளியே வா !" என்று மிரட்டினாள்.

-----

"ஏம்மா ! நாம மெட்றாஸ் போறோமா ?"
"ம்ம்ம்ம்ம்.."
"ட்ரெயினா ?"
"ப்ளேன்".

-----

ரெண்டு ஸுட்கேசையும் கால் டேக்ஸியில் ஏற்றிக்கொண்டிருந்தார் அப்பா. வீட்டுச்சாவி கொடுக்க D7 சென்றிருந்தாள் அம்மா.

"அப்பா.. ஒன் மினிட்ப்பா !!!" என்று தப தப என்று ஓடினான்.

"சந்தீப்.. ! சந்தீப் !!" என்று ஆருயிர் நண்பனின் வீட்டுக்கதவை தட்டினான்.
"என்னாடா !!"

"டேய்.. நான் ஏரோப்ப்ளேன்ல போகப்போறேனே !!!!!!" என்று சந்தோஷத்துடன் குதித்துக்காமித்தான்.

--------

No comments:

Blog Archive

Stats

cool hit counter